Your Ad Here

உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு வரிவிலக்கு படங்களை தேர்வு செய்வதில் அரசு பாரபட்சம்


  வரிவிலக்குக்கு உரிய படங்களை தேர்வு செய்வதில் தேர்வுகுழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் தொடர்ந்து பாரபட்சம் காட்டுவதாகவும், கண்ணியமாக எடுக்கப்பட்டு யூ சான்றிதழ் பெறப்பட்ட தனது தயாரிப்பான ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்றும் புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நீண்ட புகார் மனு ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதன் சுருக்கம் வருமாறு: வரிவிலக்கு படத்தின் தேர்வு குழுவினர், அதிகாரிகளின் சொற்படி நடக்கிறார்கள். தேர்வு குழு படம் பார்க்கும்போது உறவினர்களை அழைத்து வரக்கூடாது என்ற விதிமுறையை தொடர்ந்து மீறி வருகிறார்கள். படம் பார்ப்பதற்கு முன்பே பரிந்துறை கடித்தை கையெழுத்திட்டுக் கொடுத்து விடுகிறார்கள். அதிகாரிகள் தான் வரிவிக்கு கொடுப்பதா வேண்டாமா என்று முடிவு செய்கிறார்கள்.

எனது ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, வணக்கம் சென்னை படங்கள் ஆபாசமோ, பிறமொழி கலப்போ இல்லாமல் தயாரிக்கப்பட்ட படம். அதற்கு வரிவிலக்கு தரவில்லை.  வரிவிலக்கு விண்ணப்பங்களை சீனியாரிட்டி படி பரிசீலிக்காமல் வேண்டியவர் வேண்டாதவர் என்ற கணிப்பில் பரிசீலிக்கப்படுகிறது. கடைசி நேரத்தில் தவிக்க விட்டு முதல் மூன்று நாட்கள் வரிகட்ட வைத்து பின்பு வழங்கும் போக்கும் நீடிக்கிறது. வரிவிலக்கு பெற தகுதியிருந்தாலும் இழுத்தடித்துதான் சான்றிதழ் தருகிறார்கள்.

வணக்கம் சென்னை படத்துக்கு வரிவிலக்கு வழங்க பரிந்துரை செய்த குழு உறுப்பினர் மு.ராசேந்திரன் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து எங்களது படங்களுக்கு மட்டும் நியாயமற்ற முறையில் கேளிக்கை வரிவிலக்கு நிராகரிக்கப்படுவதால் எங்களை நம்பி படத்தை வாங்கும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு எங்களுக்கு நியாயம் கிடைக்க உதவவேண்டும். வரிவிலக்கு தொடர்பான அரசாணையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்