Your Ad Here

விஜய்-காஜல் ரொமான்ஸ் ஜப்பானின் ஒசாகாவில்


   விஜய்-மோகன்லால் நடிப்பில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் படம் ஜில்லா. ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் இப்படத்தை முருகா படத்தை இயக்கிய நேசன் இயக்கி வருகிறார். மதுரையை கதைக்களமாகக் கொண்ட படம் என்பதால்.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பை ஒரு செண்டிமென்டுக்காக மதுரையில் நடத்தினர். அந்த லொகேசனில் படமான காட்சிகளில் மோகன்லால், காஜல்அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ் போன்றவர்கள் மட்டுமே நடித்தனர்.

அதைத் தொடர்ந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தபோதுதான் விஜய் கலந்து கொண்டார். குடும்பப்பாங்கான படம் என்பதால், பெருவாரியான காட்சிகள் மற்றும் பாடல்களைகூட சென்னையிலேயே படமாக்கி விட்டனர்.

இருப்பினும் ஓரிரு பாடல் காட்சிகளை ஏதாவது வெளிநாட்டில் படமாக்கி படத்தை பிரமாண்டப்படுத்தலாம் என்று ஜப்பானை தேர்வு செய்திருக்கிறார்களாம்.

அங்கு தற்போது இனிமையான தட்பவெட்பம் நிலவி வருவதால், விரைவில் அங்குள்ள ஒசாகா பகுதிக்கு சென்று விஜய்-காஜல்அகர்வால் பங்குபெறும் டூயட் பாடலை படமாக்குகிறார்களாம். அதுமட்டுமின்றி, அவர்கள் சம்பந்தப்பட்ட சில ரொமான்ஸ் காட்சிகள்கூட ஜப்பான் சீதோஷ்ணத்தில்தான் படமாகிறதாம்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்