Your Ad Here

விஷால் எனக்கு பயமில்லை! அஜீத்-கார்த்தியைக்கண்டு


  ‘வெடி’, ‘சமர்’, ‘பட்டத்து யானை’ என வரிசையாக தோல்வி படங்களை கொடுத்திருப்பவர் விஷால். இருப்பினும், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் தான் தயாரித்து நடித்துள்ள ‘பாண்டியநாடு’ படத்தை தீபாவளி களத்தில் இறக்கி விடுகிறார்.

அஜீத்தின் ‘ஆரம்பம்’, கார்த்தியின் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகிறதே. கொஞ்சம் பார்த்து யோசித்து படத்தை வெளியிடக்கூடாதா? என்று விஷாலைக்கேட்டால், பார்க்கவும் வேண்டாம், யோசிக்கவும் வேண்டாம் என்கிறார்.

எந்த தைரியத்தில் அப்படி சொல்கிறீர்கள்? என்றால், படம் நன்றாக வந்திருக்கிற தைரியத்தில் தான் அப்படி சொல்கிறேன் என்கிறார். தொடர்ந்து நான் நடிக்கிற படங்கள் தோல்வியடைந்து வந்தநேரம் தான் சசீந்திரனிடம், பாண்டியநாடு கதையைக் கேட்டேன்.

கதையில் வெற்றி பெறுவதற்கான அனைத்து அம்சங்கள் இருந்தது. அதனால்தான், ஹிட் உறுதி என்று நானே தயாரிப்பாளராகவும் பிள்ளையார் சுழி போட்டேன்.

மேலும், அஜீத், கார்த்தி போன்ற நடிகர்களின் படங்களும் தீபாவளிக்கு திரைக்கு வந்தாலும், எனது படமும் வெற்றி பெறும் என்பதை இப்போதே என்னால் அடித்து சொல்ல முடியும்.அதனால் யாரைக்கண்டும் எனக்கு பயமில்லை. எனது பாண்டியநாடு வெற்றி பெறப்போவது உறுதி என்கிறார் சிக்ஸ்பேக் நாயகன் விஷால்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்