கடலுக்குள் விழுந்தார் நடிகர் சத்யன்: படப்பிடிப்பில் பரபரப்பு
ஜெய், நிவேதா தாமஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நவீன சரஸ்வதி சபதம்’. இப்படத்தின் தலைப்பு முதலில் ‘சரஸ்வதி சபதம்’ என பெயரிடப்பட்டு பின் சர்ச்சைக்குள்ளானதால், ‘நவீன சரஸ்வதி சபதம்’ என மாற்றப்பட்டது.
இப்படத்தில் வி.டி.வி.கணேஷ், சத்யன், ராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தை மலேசியாவில் உள்ள ரெடாங் என்ற தீவில் படமாக்கியபோது சத்யன் தீவுக்கருகில் கடலில் விழுந்துவிட்டாராம். இதுகுறித்து இயக்குனர் கே.சந்துரு கூறும்போது,
‘நவீன சரஸ்வதி சபதம்’ ஒரு காமெடி படம். மற்ற காமெடி படங்களைவிட இப்படத்தை கொஞ்சம் புதுமையை புகுத்தியுள்ளோம். இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள ரெடாங் தீவில் 25 நாட்கள் நடந்தது.
கடலுக்குள் சுமார் 4 மணி நேரம் படகு சவாரி செய்துதான் ரெடாங் தீவுக்கு செல்லமுடியும். அந்த தீவில் இரண்டு ரிசார்ட்ஸ் மட்டுமே இருக்கும்.
அங்கு படப்பிடிப்பு நடத்த சென்றபோது தீவுக்கருகில் கடலுக்குள் சத்யன் விழுந்துவிட்டார். எங்களின் பாதுகாப்புக்காக ஒரே ஒரு படகுதான் வரும். சத்யன் கடலில் விழுந்ததும் அவருக்கு நீச்சல் தெரியும் என்று பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவரை காப்பாற்ற முன்வரவில்லை.
ஆனால் சத்யன் விழுந்து சிறிதுநேரம் வரை வெளியே வராததால் நாங்கள் கூச்சல் போட்டு சத்யனை தேடச் சொன்னோம். அதன்பிறகு அவர்கள் கடலுக்குள் குதித்து சத்யனை மீட்டனர். பாதுகாப்புக்கு வந்தவர்கள் அவருக்கு சில முதலுதவிகளை செய்து அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார் சத்யன்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
