Your Ad Here

சிம்புவுக்கு அக்காவா…? – ரம்பா தரப்பு மறுப்பு


   சில ஆண்டுகளுக்கு முன்னர் தென்னிந்திய சினிமாவில், ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என்று பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ளார்.

ஒவ்வ‌ொரு மொழியிலும் அந்தந்த டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும்போதே கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டவர் அவ்வப்போது டி.வி. ஷோக்களில் மட்டு‌ம் நடுவராக பங்கேற்றார். தற்போது இவருக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நடிகை ரம்பா மீண்டும் சினிமாவில் நடிக்கப்போவதாகவும், அதுவும் தமிழில், நடிகர் சிம்பு நடிக்கும் படம் ஒன்றில் அவருக்கு அக்காவாக நடிக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதனை ரம்பா மறுத்துள்ளார். இதுகுறித்து ரம்பா தரப்பில் விசாரித்தபோது, தற்போது அவர் கனடாவில் வசித்து வருகிறார் என்றும், அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தான் சென்னை வருவதாகவும், மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்து அவர் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும், சிம்புவுக்கு அக்காவாக நடிக்க போகும் செய்தி உண்மையில்லை என்றும் ரம்பாவின் சகோதரர் கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்