Your Ad Here

சூர்யா சம்பளம் பெறாமல் நடித்த படம்


    தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக தீயணைப்புத் துறை, பட்டாசு விபத்துக்களை தடுக்க கடந்த ஒரு வாரமாக விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது பற்றியும், விபத்துக்களை தவிர்ப்பது பற்றியும் 2 நிமிடம் ஓடக்கூடிய விழிப்புணர்வு திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. அதில் சூர்யா நடித்துள்ளார். பட்டாசுகளை பாதுகாப்பது குறித்தும், விபத்து தடுப்பு குறித்தும் அதில் பேசி நடித்திருக்கிறார். இதற்காக அவர் சம்பளம் எதையும் பெறவில்லை. தற்போது இதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக இருக்கிறது. தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்