Your Ad Here

மல்டி ஹீரோ கதைகளில் ஆர்வம் காட்டும் விஜயசேதுபதி!

சீனுராமசாமி இயக்கிய படமான தெற்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜயசேதுபதி. அதன்பிறகு பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும் படங்களில் ஹீரோவாக நடித்த அவர், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தார்.

அதையடுத்து, இப்போது புறம்போக்கு படத்தில் ஆர்யாவுடனும், இடம் பொருள் ஏவல் படத்தில் விஷ்ணுவுடனும் இணைந்து நடிக்கிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவிலுள்ள அனைத்து ஹீரோக்களுடனும் இதேபோல் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்று கூறும் விஜயசேதுபதி, இதுவரை நான் பல படங்களில நடித்து விட்டபோதும், ஹீரோயிசம் என்பதை எந்த படத்திலும் காட்டவில்லை. கதையின் நாயகனாகவே நடித்து வருகிறேன்.

அதேபோல், தொடர்ந்தும் ஹீரோ என்ற இமேஜ்க்குள் அகப்படாமல், கதையின் நாயகனாக, ஒரு நடிகனாக சினிமாவில் வலம்வரவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்