Your Ad Here

தீபாவளிக்கு ‘ஆரம்பம்’ வெளியாவது உறுதி


‘ஆரம்பம்’ படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.

அஜீத்-நயன்தாரா, ஆர்யா-டாப்ஸி நடித்திருக்கும் படம் ஆரம்பம். விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்தான் ஆரம்பம் பட வெளியீட்டுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் படம் தீபாவளியன்று வெளியாகுமா என்கிற சந்தேகம் எழுந்தது. கடந்த ஒரு வாரமாக இது பற்றியே ஊடகங்களில் பரபரப்பாக பேச்சப்பட்டு வந்தன.

தற்போது இந்த சந்தேகத்துக்கு ஒரு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஆரம்பம் படம் தீபாவளியன்று வெளியாகப் போகிறது என விளம்பரம் கொடுத்து விட்டார்கள். பிரச்சனைகளையெல்லாம் சமாளித்து ‘ஆரம்பம்’ படம் அமர்க்களமாக வெளி வருகிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்