Your Ad Here

" நஸ்ரியா சரிப்பட்டு வரமாட்டார்" அதிருப்தி


   தமிழில், "நேரம்,ராஜா ராணி" ஆகிய இரண்டு படங்கள் தான், நஸ்ரியா நடித்து,வெளி வந்திருக்கின்றன. அதற்குள், நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு, அவருக்கு, பட வாய்ப்புகள் குவிந்தன. குடும்ப பாங்கான முகம், அலட்டல் இல்லாத நடிப்பு ஆகிய, நஸ்ரியாவின் சிறப்பம்சங்கள், கோடம்பாக்கம் ரசிகர்களுக்கு பிடித்து விட்டதால், தயாரிப்பாளர்கள், அவரை முற்றுகையிட்டனர். ஆனால், சமீபத்தில், "நய்யாண்டி" படத்தில், டூப் தொப்புளை காண்பித்து, தன் இமேஜை கெடுத்து விட்டதாக, நஸ்ரியா செய்த ஆர்ப்பாட்டம், அவர் மீது படாதிபதிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஹீரோக்களும், நஸ்ரியாவுடன் நடிக்க தயங்குகின்றனராம். இதனால், "ஒருவேளை தமிழில் மார்க்கெட் தள்ளாடினால், மலையாளத்தை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்" என்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளார் நஸ்ரியா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்