Your Ad Here

விஸ்வரூபமும் வெளியாகிறது!

வருகிற தீபாவளி தினத்தில் அஜீத்தின் ஆரம்பம், விஷாலின் பாண்டியநாடு, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா என பல படங்கள் கோதாவில் குதிக்கின்றன.


   ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் வந்தால் தியேட்டர் பிரச்னை வருமே என்று சிலர் அறிவுறுத்தியபோதிலும், இருக்கிற தியேட்டர்களைப் பிரித்து களத்தில் குதிக்க தயாராகி விட்டார்கள்.

அஜீத்தின் ஆரம்பம் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன்பே திரைக்கு வரும் நிலையில், தீபாவளி அன்று கார்த்தியின், ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ ரிலீசாகிறதாம்.

இதே தீபாவளி தினத்தில் கமலின், விஸ்வரூபம் படமும் ரிலீசாகிறதாம். இந்த படத்தை டிடிஎச் மூலம் வெளியிட திட்டமிட்டு அந்த முயற்சிக்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால பின்வாங்கிய கமல், இப்போது தீபாவளி தினத்தன்று விஜய் டி.வியில் விஸ்வரூபம் படத்தை வெளியிடுகிறாராம்.

தீபாவளி ஸ்பெஷலாக தமிழ் சேனல்கள் ஒவ்வொன்றிலும் புதிய படங்களை ஒளிப்பரப்புவார்கள். அந்த வகையில் இந்தாண்டு விஜய் டி.வி.யில் தீபாவளி ஸ்பெஷலாக விஸ்வரூபம் படத்தை ஒளிப்பரப்புகிறார்கள்.

ஆக, விஸ்வரூபம்-2வை தீபாவளிக்கு வெளியிட நினைத்திருந்த கமல், அப்பட வேலைகள் இன்னும் முடிவடையாததால், விஸ்வரூபம் படத்தை வெளியிட்டு அந்த குறையை தீர்த்துக்கொள்ளப்போகிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்