Your Ad Here

என்றென்றும் புன்னகை பாடல்கள் கமல் வெளியிடுகிறார்


  ஜீவா, த்ரிஷா, ஆண்ட்ரியா நடிக்கும் படம் ‘‘என்றென்றும் புன்னகை’’, டாக்டர் வி.ராம்தாஸ், தமிழ்குமரன் இணைந்து தயாரிக்கிறார்கள். மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். அகமது இயக்கி உள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நாளை (அக்டோபர் 24) மாலை 6 மணிக்கு சத்யம் தியேட்டரில் நடக்கிறது. கமல்ஹாசன் பாடல்களை வெளியிட இயக்குனர் பாலா பெற்றுக் கொள்கிறார். விழாவில் திரையுலக வி.ஜ.பிக்கள் மற்றும் ஜீவா ரசிகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நீ தானே என் பொன்வசந்தம், முகமூடி, டேவிட் என ஹாட்ரிக்  தோல்விகளை சந்தித்துள்ள ஜீவாவிற்கு இது முக்கியமான படம். இளமை ததும்பும் காதல் படமாக ‘‘என்றென்றும் புன்னகை’’ உருவாகி உள்ளது. பாடல்களும் நன்றாக வந்திருப்பதாக டெக்னிக்கல் ஏரியா தகவல்கள் தெரிவிக்கிறது. விரைவில் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகவிருக்கும் த்ரிஷாவுக்கும் இது முக்கியமான படமாகும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்