Your Ad Here

நான் ஏன் ரகசிய திருமணம் செய்யணும்...? சமந்தா


  என் திருமணத்தை பற்றி தவறான செய்திகள் நிறைய வருகின்றன, நான் ஏன் ரகசிய திருமணம் செய்ய போகிறேன் என்று நடிகை சமந்தா கோபப்பட்டுள்ளார். தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. இவருக்கும், நடிகர் சித்தார்த்துக்கும் காதல் இருப்பதாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பரவலாக செய்திகள் பரவிக்கிடக்கிறது. ஆனால் இதனை இருவருமே மறுத்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெலுங்கு சினிமாவில் பரபரப்பு கிளம்பியது. ஆனால் இதனை மறுத்துள்ளார் சமந்தா.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ராமய்யா ஒஸ்தாவய்யா படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் சமந்தா பங்கேற்றார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் ரகசிய திருமணம் குறித்து கேள்விகேட்டபோது கோபப்பட்டார். என் திருமணம் பற்றி நிறைய செய்திகள் வருகின்றன. நான் ரகசிய திருமணம் செய்து‌ கொண்டதாகவும், அந்த நடிகருடன் சேர்ந்து வாழ்வதாகவும் செய்திகள் வருகின்றன. ஆனால் அது உண்மை கிடையாது. நான் ஏன் ரகசிய திருமணம் செய்ய போகிறேன். இப்போதைக்கு என் திருமணம் பற்றி நான் யோசிக்கவே இல்லை. அது நடக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகும். என் திருமணம் நடக்கும் போது நானே உங்கள் எல்லோருக்கும் வெளிப்படையாக சொல்வேன் என்று கூறியுள்ளார். மேலும் தெலுங்கு சினிமாவிற்கு சில காலம் ஓய்வு அறிவித்து இருப்பதாகவும், தமிழ்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டபோவதாகவும் சமந்தா தெரிவித்துள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்