Your Ad Here

கமல் நம்பிக்கை விஸ்வரூபம்-2-க்கு பிரச்னை வராது


   கடந்தமுறை ‘விஸ்வரூபம்’ படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் போன்று ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு பிரச்னைகள் எழாது என கமல்ஹாசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கமல்ஹான் நடித்து, இயக்கி, பிரமாண்டமாக தயாரித்த படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்திற்கு ஏற்பட்ட பிரச்னைகள் அவ்வளவு எளிதானதல்ல. இந்தநாட்டை விட்டே வெளியேறுவேன் என்று சொல்லும் நிலைமைக்கு கமல் தள்ளப்பட்டார். பின்னர் ஒருவழியாக பிரச்னை தீர்ந்து, படமும் இந்தாண்டு துவக்கத்தில் ரிலீஸாகி, வசூலையும் வாரி குவித்தது. இதனையடுத்து அதன் இரண்டாம் பாகத்தை மும்முரமாக கமல் இயக்கி, நடித்து, தயாரித்து வருகிறார். படமும் முடியும் தருவாயில் உள்ளது.

இந்நிலையில், இந்தமுறை ‘விஸ்வரூபம்-2’ படத்திற்கு பிரச்னைகள் எழாது என்று கமல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, குழந்தை நட்சத்திரத்தில் தொடங்கி உதவி நடன இயக்குநராக சினிமாவில் பணியாற்றிய காலம் முதல் இப்போது வரை பல விஷயங்களை கற்று கொண்டு வருகிறேன். அறியாமை, அரசியல் பிரச்னைகள் போன்ற காரணங்களால் விஸ்வரூபம் படத்திற்கு பல பிரச்னைகள் கிளம்பின. ஆனால் இந்த முறை அதுபோன்று எந்த பிரச்னைகளும், சர்ச்சைகளும் கிளம்பாது. இந்தப்படத்தை அறிவுப்பூர்மாக அணுகுவார்கள். ‘விஸ்வரூபம்-2’ நிறைய பாராட்டுகளையும், வசூலையும் தரும் என நம்புகிறேன். இந்தாண்டு கடைசியில் படத்தை ரிலீஸ் செய்யவுள்ளேன் என்று கூறியுள்ளார்.

மேலும் மும்பையில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவில், கமலின் திரையுலக பய‌ணத்தை பாராட்டி அவருக்கு வாழ்நாள் சாதனையாள் விருது வழங்கப்பட இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கமல், இந்த விருதை பெற எனக்கு தகுதி இருக்கா இல்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த விருதுக்கு என்னை பரிந்துரை செய்ததற்கு மகிழ்ச்சி. வயதானவர்களுக்கு கொடுக்க வேண்டிய விருதை குறைந்த வயதுள்ள எனக்கு கொடுக்கலாமா என்று சிலர் கேட்கின்றனர், அவர்களுக்கு ‌நான் சொல்வ‌தெல்லாம் கொஞ்சம் பொறுங்கள், இந்த விருதை வேறு யாருக்காவது கொடுக்க நான் யோசித்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்