தன் காதலி ஹன்சிகாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளாராம் சிம்பு.
சிம்பு- ஹன்சிகா இருவரும் வாலு மற்றும் வேட்டை மன்னன் ஆகிய படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர்.
இப்படத்தில் நடிக்கும்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியது. இதை இருவரும் வெளிப்படையாகவே அறிவித்தனர்.
இந்நிலையில் துபாயில் சிமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ஹன்சிகா மோத்வானி சென்றார்.
அவருக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
சிம்புவிற்கு எந்த விருதும் வழங்கப்படாததால் அவர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
தனது காதலி விருது வாங்குவதை நேரில் பார்க்க முடியாததற்கு ஹன்சிகாவிடம் வருத்தம் தெரிவித்ததாக சிம்பு தனது டுவிட்டரில் எழுதியுள்ளார்.