ராஜா ராணி படம் எனக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தரும் என்கிறார் நஸ்ரியா.
ஏ,ஆர் ,முருகதாஸ் தயாரிப்பில் அட்லி இயக்கும் திரைப்படம் ராஜா ராணி.
இப்படத்தில் ஆர்யா நயன்தாரா, ஜெய், நஸ்ரியா மற்றும் சந்தானம் ஆகியோ நடித்துள்ளனர்.
இதன் டிரெய்லானது சமீபத்தில் வெளியிடப்பட்டு ரசிகர்களை அள்ளியுள்ளது.
ராஜா ராணி செப்டம்பர் 27ம் திகதி ரசிகர்களுக்கு விருந்து படைக்கவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து நஸ்ரியா கூறுகையில், எனக்கு இப்படம் ஒரு திருப்புமுனையாக அமையும்.
இதில் நான் கீர்த்தனா என்ற கதாபாத்திரத்தில் ஐடி தொழிலில் வேலை பார்க்கும் பெண்ணாக நடித்துள்ளேன்.
இப்படம் எனக்கும், நயன்தாராவுக்கும் நல்ல போட்டியா இருக்கும்.
இந்த போட்டியினை நான் நல்ல முறையில் எடுத்துக்கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.