ஆரம்பம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது அஜித் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
அஜீத், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்துள்ள ஆரம்பம்.
படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 19ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் மொத்தம் 5 பாடல்கள் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆரம்பம் பட பாடல்களை கேட்க அஜித் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு ஒரு வருத்தமும் ஏற்பட்டுள்ளதாம்.அதற்கு காரணம் படத்தில் தீம் மியூசிக் இல்லாதது தான்.
ஆரம்பம் படத்தை போன்று அஜித்தின் முந்தைய படங்களான பில்லா, மங்காத்தா மற்றும் பில்லா 2 படங்களுக்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசையமைத்துள்ளார்.
அந்த படங்களில் எல்லாம் தீம் மியூசிக் வைத்தவர் ஆரம்பம் படத்தில் மட்டும் அதை வைக்காதது அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஆனால் சர்பிரைஸாக தீம் மியூசிக் வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார்களாம் ரசிகர்கள்.