Your Ad Here

தெலுங்கு ஹீரோக்களின் டார்லிங்காக சமந்தா!

தெலுங்கு நாயகர்களின் டார்லிங்காக வலம் வருகிறார் சமந்தா.
தெலுங்கு சினிமாவில், அனுஷ்கா, தமன்னா, அஞ்சலி என, பல நடிகைகள் இருந்த போதும் நம்பர் ஒன் கமர்ஷியல் கதாநாயகியாக உள்ளார் சமந்தா.

கதை பிடித்திருக்கும் பட்சத்தில் வயதான நாயகன், இளம் நாயகன் என்ற பாகுபாடெல்லாம் பார்க்காமல் நடிப்பதால் ஆந்திர நாயகர்கள் சமந்தா மீது தனி பாசம் வைத்துள்ளார்களாம்.

அதோடு கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சமந்தா கடைபிடித்து வரும் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

இதன் காரணமாக தற்போது தெலுங்கு சினிமாவுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் சமந்தா.

அதேபோல் அடுத்து தமிழுக்கு வரும் போதும் தன் கொள்கைக்கு பங்கம் ஏற்படுத்தாத கதைகளுக்கு மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடிக்கும் முடிவில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் சமந்தா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்