Your Ad Here

அஜீத்தின் ஆரம்பம் பட ட்ரைலருக்கு யு ஏ சான்று!

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் அஜீத்தின் ஆரம்பம் பட ட்ரைலருக்கு சென்சார் யு ஏ சான்று வழங்கியுள்ளது. இது படத்தின் தொலைக்காட்சி உரிமை பெற்றவர்களுக்கு கொஞ்சம் கவலை தருவதாக உள்ளது. ட்ரைலருக்கு யு ஏ என்றால் படத்துக்கும் அப்படித்தானே கிடைக்கும், இதனால் படத்தை ஒளிபரப்ப முடியாதே என்ற கவலைதான் அது.

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் - ஆர்யா - நயன்தாரா - டாப்ஸி நடித்துள்ள படம் ஆரம்பம். இந்தப் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. பொதுவாக படம் வெளியாகும் தேதிக்கு சில தினங்கள் இருக்கும்போதுதான் சென்சாருக்கு அனுப்புவார்கள். ஆனால் இந்த முறை தீபாவளிக்கு வெளியாகும் படங்கள், ஓரிரு வாரங்களுக்கு முன்பே சென்சாராகி, சான்றிதழைத் தந்தாக வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் நிபந்தனை விதித்திருந்தனர். இதனை மனதில் கொண்டு ஆரம்பம் படத்தின் ட்ரைலர் நேற்று தணிக்கை செய்யப்பட்டது. ட்ரைலருக்கு யுஏ சான்று வழங்கப்பட்டுள்ளது.

இது படத்தின் தொலைக்காட்சி உரிமை பெற்றவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ட்ரைலரைப் போல படத்துக்கும் யு ஏ கிடைத்தால், தொலைக்காட்சிக்காக அவர்கள் மீண்டும் மறுதணிக்கை செய்து யு சான்றிதழ் பெற வேண்டியிருக்கும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்