Your Ad Here

மொடல் அழகியுடன் ஜோடி சேரவுள்ள சந்தானம்!

கொமடிகளில் பட்டையை கிளப்பி வந்த சந்தானம் தற்போது மொடல் அழகியுடன் ஜோடி சேரவுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது லொள்ளுத்தனமான கொமடியால் ரசிகர்ளின் நெஞ்சில் நாற்காலி போட்டு உட்காந்துள்ளார் சந்தானம்.

இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நானும் ஒரு நாயகன் என்று மூன்று நாயகர்களில் ஒருவராக நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீநாத் இயக்கத்தில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடி போடவுள்ளார் மும்பை மொடல் அழகி அஸ்னா ஜவேரியா.

இவர் ஏர்டெல் மற்றும் இதர விளம்பர படங்களில் நடித்தவராவர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்