Your Ad Here

நடிகை அஞ்சலிக்கு சைதாபேட்டை நீதிமன்றம் பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது!

இயக்குனர் களஞ்சியம் மீது அவதூறு பரப்பிய வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நடிகை அஞ்சலிக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவு போட்டுள்ளது சைதாபேட்டை நீதிமன்றம்.

இயக்குனர் களஞ்சியம் தனது சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்தார் என்றும், தாம் சம்பாதித்த பணத்தை கைப்பற்றிக் கொள்ள முயற்சி செய்தார் என்றும், தன் மீது அவதூறு செய்திகளை பரப்பியதாக, அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார் இயக்குனர் மு.களஞ்சியம்.

ஆனால், அஞ்சலி சைதாபேட்டை நீஹிமன்றம் இதுவரை அனுப்பிய 3 சம்மன்களை பெற்றுக் கொள்ளவும் இல்லை, இத்துடன் 8 முறையும் நேரில் ஆஜராக வில்லை என்று, அவர் மீது பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது சைதாபேட்டை நீதிமன்றம்.

ஆனால், அஞ்சலி ஊரில் இல்லை என்றும், அவரால் இடைவிடாத படப்பிடிப்பின் காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என்றும், அஞ்சலி தரப்பில் கூறப்படும் தகவலாக இருக்கிறது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்