காதல் நாயகியாக நடித்து வந்ததை அடுத்து சந்திரமுகி அவதாரம் எடுக்கப்போகிறாராம் ஹன்சிகா மோத்வானி.
சுந்திர்.சி இயக்கத்தில் வெளியாகும் படங்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் கதையாகவே இருக்கும்.
முதன் முறையாக கொமடி என்பதிலிருந்து விலகி அரண்மனை என்ற பெயரில் சந்திரமுகி பாணியில் ஒரு திகில் படத்தை இயக்கி நடிக்கிறார்.
இப்படத்தில் ஹன்சிகா, லட்சுமிராய், ஆண்ட்ரியா என மூன்று நாயகிகளாம்.
ஆனாலும் ஹன்சிகாவுக்கு தான் பிரதான வேடமாம்.
இந்த திகில் நிறைந்த படத்தில் சந்திரமுகியில் ஜோதிகா நடித்தது போன்ற ஒரு வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார்.
இதுவரை நடித்திராத வேடம் என்பதால் இந்த படத்துக்காக நிறைய ஹோம் ஒர்க் செய்கிறாராம் ஹன்சிகா.