Your Ad Here

டுவிட்டரில் கலக்கிய விஜய்

டுவிட்டரில் “வீ லவ் விஜய் அண்ணா“ என்ற வசனங்களை போட்டு கலக்கி வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை விஜய்க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

அந்தவகையில் அவரை பற்றி டுவிட்டரிலும் ரசிகர்கள் புகழ்ந்த வண்ணம் உள்ளார்கள்.

டுவிட்டரில் விஜய் ரசிகர்கள் வீ வல் விஜய் அண்ணா என்று போட்டு தங்கள் தளபதியை புகழ்ந்து டுவிட் செய்துள்ளனர்.

ஏராளமான ரசிகர்கள் ட்வீட் செய்ததால் வீ லவ் விஜய் அண்ணா என்பது ட்விட்டரில் சில மணிநேரம் டிரென்டில் இருந்தது.

விஜய் பற்றி அவரது ரசிகர்கள் எழுதிய டுவிட்கள்:

எல்லோரும் ஹீரோவாகலாம். ஆனால் அனைவராலும் அண்ணன் ஆக முடியாது. வீ லவ் விஜய் அண்ணா என்று விஜய் பேன் என்பவர் டுவிட் செய்துள்ளார்.

விஜய் அண்ணா டயலாக் பேசணும்னு அவசியமே இல்லை, அந்த ஒரு சிரிப்பு சிரிச்சாலே போதும். ஆவ்வ்வ்வ்!!! என்ன க்யூட் லவ், வீ லவ் விஜய் அண்ணா என்று ஸ்ரீஜா என்பவர் தெரிவித்துள்ளார்.

விஜய் ஒரு எளிமையான மனிதர். அவர் ரசிகர், ரசிகைகளை தனது உடன்பிறப்புகளாகவே பார்க்கிறார். வீ லவ் விஜய் அண்ணா. உங்கள் ரசிகையாக இருப்பதில் பெருமை என்று தனா ரெட்டி தெரிவித்துள்ளார்.

என்னைப் பொருத்த வரை விஜய் அண்ணா தான் முதல் அதிசயம். உலக அதிசயங்கள் அப்புறம் தான் என்று மணிகன்டன் என்பவர் தெரிவித்துள்ளார்.

























Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்