Your Ad Here

பிற ஆண்களோடு நெருக்கமாக மகள் நடிப்பதை எப்படி ஒரு தாய் பார்க்க முடியும் பத்மப்ரியா தாயார் ஆவேசம்!

நான் இசையமைத்த பாடல்கள் எப்படி படமாக்கப்பட்டிருக்கிறது என்பதை நானே பார்க்கறதில்ல என்று ஒரு விழாவில் இசைஞானி இளையராஜா சொன்னதை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஏனென்றால் அவர் நினைத்த மாதிரி அதை படமாக்குவதில்லை என்கிற அர்த்தம்தான் அதில் விரவி பரவி கிடக்கிறது. நான் நடிச்ச படத்தை நானே பாக்கறதில்ல டைப்பில் சில நடிகர்களும் இங்கு இருக்கிறார்கள். அவர்களை பற்றி நாம் அதிகம் அலட்டிக் கொள்ள தேவையில்லை. 

ஆனால் பத்மபிரியா விஷயத்தில் கேட்ட தகவல் ஒன்று ஷாக் ரகம். இவர் நடித்த படங்கள் எதையும் இதுவரைக்கும் பார்த்ததேயில்லையாம் இவரது அம்மா. ஏன் இப்படியொரு முரட்டு பிடிவாதம்? வேறொன்றுமில்லை. மகள் நடிக்க வருவதை விரும்பியதேயில்லை அவர். அதையும் மீறி அவர் நடிக்க வந்ததுதான் இந்த புறக்கணிப்புக்கு காரணம்.

 மேலும் மகள் பிற ஆண்களோடு நெருக்கமாக நடித்து இருக்கும் காட்சியை எல்லாம் எப்படி ஒரு தாயால் ரசித்து பார்க்க முடியும் என எதிர்கேள்வியும் கேட்கிறாராம். பழமையான கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் அவரை பத்மப்ரியா தன்னுடைய படங்களை பார்க்கும்படி கட்டாயப்படுத்துவதும் இல்லையாம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்