Your Ad Here

லண்டனில் படமாகும் கத்தி, செல்பி புள்ள பாடல்!

விஜய் நடிக்கும் படங்கள் வெற்றியடைகிறதோ இல்லையோ…அவர் பாடுகிற பாடல்கள் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். துப்பாக்கி படத்தில் கூகுள்… கூகுள்…, தலைவா படத்தில் வாங்கண்ணா… வணக்கங்கண்ணா… ஜில்லா படத்தில் கண்டாங்கி… பாடல்கள் சமீபகால உதாரணங்கள்.

இந்தப் பாடல்களைத் தொடர்ந்து கத்தி படத்தில் செல்ஃபி புள்ள… என்று தொடங்கும் பாடலை பாடி இருக்கிறார் விஜய். ஏற்கனவே விஜய் பாடி சூப்பர்ஹிட்டான பாடல்கள் வரிசையில் இந்தப் பாடலும் இடம் பிடிக்கும் என்று சொல்லும் அளவுக்கு நிச்சயம் சூப்பர்ஹிட் ஆகுமாம். அனிருத் இசையமைப்பில் சில தினங்களுக்கு முன் செல்ஃபி புள்ள… என்ற பாடலை விஜய் பாடினார்.

கத்தி படத்தில் எதற்கெடுத்தாலும் செல்ஃபி எடுத்துக் கொண்டே இருக்கும் சமந்தாவை, ஹீரோ விஜய் புகழ்ந்து பாடுவது போன் காட்சியாம். எனவேதான் செல்ஃபி புள்ள என்று இப்பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறதாம். பெப்பி நம்பர் என்று சொல்லப்படும் இந்தப் பாடலை ஒரு மணி நேரத்திலேயே பாடி முடித்துவிட்டாராம் விஜய். பாடல் பதிவு முடிந்த பிறகு அனைவரும் இப்பாடலை கேட்டனராம்.

கேட்பதற்கு மிக இனிமையாக வந்துள்ளது என்றும் இந்தப் பாடல் சூப்பர்ஹிட்டாகும் என்றும் அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டத்தை அடுத்து, இப்பாடலுக்காக பிரம்மாண்டமானமுறையில் காட்சிகளை அமைக்க முடிவு செய்திருக்கிறாராம் கத்தி பட இயக்குநர் எ.ஆர்.முருகதாஸ்.

எனவே லண்டனுக்குச் சென்று இந்தப் பாடலை படம் பிடித்து வரலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். லண்டனில் உள்ள முக்கிய இடங்களில் படம்பிடிக்க உள்ள இந்தப்பாடலில் விஜய், சமந்தா இருவரும் கலந்து கொள்கிறார்கள்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்