Your Ad Here

மீண்டும் ரஜினியை மிஞ்சிய அஜித்! நடந்த உண்மை சம்பவம்

அஜித் பற்றி எப்போதும் மீடியாக்களில் புகழ் பாடல் தான். அந்த மாதிரி செய்திகளுக்கு மகுடம் வைத்தார் போல் வந்துள்ளது மற்றொரு ’தல’புராணம்.

இவர் எல்லோரிடமும் எளிமையாக பழகுவார், படப்பிடிப்பில் டீ பாய் வரை சென்று கை கொடுத்து விட்டு தான் வருவார் என்று எல்லோருக்கும் தெரியும்.

தற்போது தல-55 படத்தின் பணியாற்றும் லைட்மேன் ஒருவர் அஜித் பற்றி கூறிய சம்பவம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.

அவர் பேசுகையில் ‘தினமும் எங்கள் எல்லோருக்கும் அவர் கையாலேயே பிரியாணி செய்து போடுகிறார், ஒரு நாள் விடாமல் எங்களை சந்தித்து விட்டு தான் செல்வார். மேலும் நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகு தான் அவர் சாப்பிடவே செல்வார்.

படப்பிடிப்பில் எல்லோரையும் சமமாக மதிப்பார், இதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ஒருவர் மட்டும் தான் எங்களை இதுபோல் நடத்துவார், ஆனால் இவரின் அன்பு ரஜினிக்கு ஒருபடி மேலே சென்றுவிட்டது’ என உருக்கமாக கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்