Your Ad Here

கமலுடன் மோதும் அஜித்!

தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர் பலங்களை கொண்டவர்கள் அஜித், கமல். இவர்கள் படங்கள் வருகிறது என்றாலே ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள்.

இந்நிலையில் ஒரே நாளில் இவர்கள் படம் வெளிவந்தால் சொல்லவே தேவையில்லை, தற்போது அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளிவரும் என படக்குழு தெரிவித்திருந்தது.

அதேபோல் கமல் இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம்-2 எப்போது வரும் என்று தெரியாத நிலையில், இப்படமும் பொங்கலுக்கு தான் வரும் என கமல் தரப்பில் கூறப்பட்டதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்