Your Ad Here

ரவி கே சந்திரன்- ஜீவா மீண்டும் இணைகிறார்கள்?

பிரபல ஒளிப்பதிவாளரான ரவி கே சந்திரனுக்கு இயக்குநராக வேண்டும் என நீண்ட கால ஆசை. ஒளிப்பதிவாளராக பணிபுரிய தொடர்ந்து கமிட்மெண்ட் இருந்ததால் அவரால் டைரக்டர் நாற்காலியில் உட்கார முடியவில்லை. இவரைப்போலவே இயக்குநராக ஆசைப்பட்டு, இயக்குநராகியும் விட்ட ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த், ரவி கே சந்திரனுக்கு கூறிய அட்வைஸ் என்ன தெரியுமா? டைரக்டராகணும்னா முதல்ல கேமராமேனாக வொர்க் பண்றதை ஸ்டாப் பண்ணணும். அப்பதான் டைரக்டராக முடியும்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பெரிய இயக்குநர்கள், பெரிய ஹீரோக்களின் படங்களில் பணிபுரிய ஒப்புக்கொண்டிருந்த ரவி கே சந்திரன்,கே.வி.ஆனந்த் சொன்ன அட்வைஸின்படி அனைத்து படங்களில் இருந்தும் விலகினார். இனி கேமராமேனாக பணிபுரியமாட்டேன் என்ற அறிவித்துவிட்டு, யான் படத்தை இயக்கத் தொடங்கினார். படப்பிடிப்பு முடிந்து யான் படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன.

யான் படம் மிக சிறப்பாக வந்திருப்பதைக் கண்டு தயாரிப்பாளருக்கு ஏக சந்தோஷம். படம் நிச்சயம் வெற்றியடையும் என்று நம்பி பிரம்மாண்டமாக விளம்பரம் செய்ய தயாராகிவிட்டார். இதை எல்லாம் பார்த்ததும், யான் படம் ஹிட்டானால் ரவி கே சந்திரன் முன்னணி இயக்குநராகிவிடுவார், எனவே இப்போதே துண்டைப்போட்டு வைப்போம் என்ற எண்ணத்தில், அடுத்தப்படத்துக்கு நீங்கள் எப்போது கால்ஷீட் கேட்டாலும் தருகிறேன் என்று சொல்லி வருகிறாராம் ஜீவா. ரவி கே சந்திரனோ புன்னகையை மட்டும் பதிலாக தந்திருக்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்