தற்போது இவர் ஒரே நேரத்தில் "புறம்போக்கு", "இடம் பொருள் ஏவல்", "வன்மம்", “மெல்லிசை” என பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இவைதவிர ‘வசந்தகுமாரன்’ என்ற படத்திலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இப்படத்தை ஸ்டூடியோ நைன் நிறுவனம் தயாரிக்க, அறிமுக இயக்குனர் ஆனந்த் குமரேசன் இயக்குகிறார். கதைக்கும் விஜய்சேதுபதிக்கும் ஏற்ற நாயகியை தேடி கொண்டிருந்தார்கள்.
பல்வேறு பரிசீலனைகளுக்கு பின்னர் நடிகை பிந்து மாதவி தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். விஜய்சேதுபதி - பிந்துமாதவி இணைந்து நடிக்கும் முதல் படம் இது. இப்படம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது.
