நடிகர் : சந்தானம்
நடிகை : ஆஷ்னா சாவேரி
இயக்குனர் : ஸ்ரீநாத்
இசை : சித்தார்த்
ஓளிப்பதிவு : சக்தி
சென்னையில் சைக்கிளில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் வேலை பார்த்து வருகிறார் நாயகன் சந்தானம். இவரின் முதலாளி குட்டியானையோடு (வேன்) வந்தால்தான் வேலை தருவேன் என்று சொல்லி அவரை அனுப்பிவிடுகிறார். தாய், தந்தை இல்லாத சந்தானம், தனக்கு தெரிந்தவரிடம் இதைப்பற்றிக் கூறி புலம்புகிறார். அதற்கு அவர் உனக்கு ஊரில் சொத்து இருப்பதாகவும், ஆனால் நீ அங்கு சென்றால் உன்னை கொன்றுவிடுவார்கள் என்று உன் தாய் இறப்பதற்குமுன் கூறியதாக சொல்கிறார்.
அதற்கு சந்தானம் முன் பகையெல்லாம் இப்போது இருக்காது. நான் அந்த ஊருக்குச் சென்று சொத்துக்களை விற்று வருகிறேன் என்று சொல்லி ரெயிலில் புறப்படுகிறார். ரெயிலில் நாயகி ஆஷ்னா சாவேரியை சந்திக்கிறார். இவர்களின் சந்திப்பு நட்பாக மாறுகிறது. இருவரும் ஒரே ஊருக்கு பயணிக்கிறார்கள். ஊருக்குச் சென்றவுடன் இருவரும் அவரவர் வேலையை பார்க்க பிரிகிறார்கள்.
சந்தானம் தன் சொத்தைவிற்க அந்த ஊரில் பெரியவரான நாகிரெட்டியை சந்திக்கிறார். அவர் சந்தானத்தை வீட்டிற்கு அழைத்து சென்று விருந்து வைக்கிறார். அங்கு நாயகி ஆஷ்னாவை சந்திக்கும் சந்தானம் அவர் ஊர் தலைவரின் மகள் என்று தெரிந்துக் கொள்கிறார்.
அதே சமயம் ஊர் பெரியவரும் அவருடைய மகன்களும் குடும்ப பகையைத் தீர்க்க, நீண்ட நாட்களாக தேடி வந்த நபர் சந்தானம் என்பதை தெரிந்துக் கொள்கிறார்கள். அதனால் சந்தானத்தை கொல்ல முயற்சி செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அது என்னவென்றால் வீட்டிற்குள் யாரையும் கொல்ல மாட்டார்கள். வீட்டிற்கு வெளியே தான் கொல்வார்கள். வீட்டிற்குள் விருந்தாளிப் போல் உபசரிப்பார்கள்.
இதை அறிந்துக் கொண்ட சந்தானம் வீட்டிற்குள்ளேயே இருந்து இவர்களை ஏமாற்றி வருகிறார். இறுதியில் வீட்டை விட்டு வெளியேறி உயிரோடு தப்பித்தாரா? நாயகியை கரம்பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தில் முதல் தடவையாக கதாநாயகன் பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறார் சந்தானம். ஹீரோயிச பாடலுடன் அறிமுகம் ஆகும் சந்தானம் எதிர்பார்க்க வைத்து ஏமாற்றி விட்டார். படத்தில் கமர்சியல் ஹீரோவாக இருப்பார் என எதிர்ப்பார்த்தால் முதல் பாடல் தவிர வழக்கமான சந்தானமாகவே காட்சியளித்திருக்கிறார். இவர் படம் முழுக்க வந்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. சிறப்பாக நடனம் ஆடி அசத்தியிருக்கிறார்.
நாயகி ஆஷ்னா சாவேரி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பதற்கான வாய்ப்பு குறைவு என்றாலும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். குறிப்பாக பாடல் காட்சிகளில் அழகாக தெரிகிறார்.
படத்தில் நாகிரெட்டி மற்றும் அவரது மகன்கள், ராஜ்குமார், பவர் ஸ்டார், மிர்ச்சி செந்தில், விடிவி கணேஷ் ஆகியோர் கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார்கள்.
சித்தார்த் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பாடல் காட்சிகளில் சக்தியின் ஒளிப்பதிவு சிறப்பாக அமைந்துள்ளது.
தெலுங்கில் மிகப்பெரிய ஹிட்டான படத்தை தமிழில் சந்தானத்தை வைத்து இயக்கிய ஸ்ரீநாத், அதில் முழுமையாக கையாண்டு சிரிப்பு விருந்தாக படைக்கவில்லை. சந்தானம் படத்தில் சொல்லும் வசனம், இது ஒன்னும் அவ்ளோ பெரிய காமெடி இல்ல, ஆனா மனசு கஷ்டப்படக்கூடாது என்பதற்காக சிரிக்கிறேன் என்னும் வசனம் இப்படத்திற்கும் பொருந்தும்.
மொத்தத்தில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ வல்லவர்களுக்கு மட்டும்.
- See more at: http://tamilcloud.com/cinema/vallavanukku-pullum-aayudham-movie-review/#sthash.zd33vvmu.dpuf
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.