Your Ad Here

சந்தானத்தின் அடுத்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகிறதாம்!


சந்தானம் நாயகனாக நடித்த முதல் படம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இந்த படத்தில் சந்தானம் மட்டும் பிரபலமானவராக இருந்தார். மற்றபடி படத்தை இயக்கியவர் ஸ்ரீநாத்.

அதேப்போல் நாயகி ஆஷ்னா சவேரி அவரும் புதிய வரவுதான். மேலும்இசையமைத்தவர் சித்தார்த் என்ற புதியவர்தான். இப்படி அந்த படத்தில் பணியாற்றிய பலர் பிரபலமில்லாதவர்கள்தான்.

அதேபோல். பவர்ஸ்டாரைகூட ஒரேயொரு டயலாக் மட்டுமே பேச வைத்து விட்டு முடித்துக்கொண்ட சந்தானம், என் படத்துக்கு பிரபலம் தேவையில்லை.

திறமையானவர்கள் புதியவர்களாக இருந்தாலும் போதும். அதோடு, நான் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் என்னைச்சுற்றி இருந்தாலே போதும். நான் மாபெரும் வெற்றி அடைந்து விடுவேன் என்றும் சொன்னார்.

ஆனால், அடுத்து அவர் நாயகனாக நடிக்கப்போகும் புதிய படத்திலோ, பெரிய டெக்னீஷியன்களை நியமித்துக்கொள்ளுமாறு அப்படத்தை தயாரிக்கயிருக்கும் பிவிபி நிறுவனம் சந்தானத்திடம் கூறியிருக்கிறார்களாம்.

ஆனபோதும், சந்தானம்தான் அதில் ஈடுபாடு இல்லாமல் இருக்கிறாராம். அதேசமயம், கதாநாயகியை மட்டும் கொஞ்சம் பேசப்படும் நடிகையாக சேர்த்துக்கொள்வோம் என்று நினைப்பவர், பிரமாண்டமாக படமாக்க ஆசைப்படுகிறாராம்.

மேல்தட்டு ஹீரோக்களை போன்று மிகப்பெரிய அளவில் செட் அமைத்து தானும் பறந்து பறந்து சண்டை போட வேண்டும் என்றும் ஆசையில் இருப்பவர், அப்படத்திற்காக ஒரு அதிடியான மெகா பட்ஜெட் கதையை தேடிக்கொண்டிருக்கிறாராம்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்