சரத்குமார் கடைசியாக சோலோ ஹீரோவாக நடித்த படம் ஜக்குபாய். அதன் பிறகு காஞ்சனா, சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில், கொல கொலையா முந்திரிக்கா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடித்தார். தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் சண்டமாருதம். சரத்குமாருடன் இணைந்து அவர் மனைவி ராதிகாக சரத்குமார் மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபன் ஆகியோர் இதனை தயாரிக்கிறார்கள்.
இந்தப் படத்தின் கதையை சரத்குமார் எழுதியுள்ளார். திரைக்கதை வசனத்தை ராஜேஷ்குமார் எழுதியுள்ளார். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ராதிகா சரத்குமார், சமுத்திரகனி, கன்னட நடிகர் அருண்சாகர் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ஹீரோயின் இன்னும் முடிவாகவில்லை. ஜேம்ஸ் வசந்தன் இசை அமைக்கிறார். என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
“புயல், சூறாவளியை தாண்டி அசுரவேகத்தில் வீசும் காற்றை சண்டமாருதம் என்று குறிப்பிடுவார்கள். படத்தில் சரத்குமாருக்கு அப்படி ஒரு கேரக்டர். வில்லன் கேரக்டரும் படு பயங்கரமாக இருக்கும். பக்கா ஆக்ஷன் படம்தான். ஆனால் இதுவரை யாரும் சொல்லப்படாத கதை களத்தில் சொல்லப்படாத கதையை சொல்லப்போகிறோம். “எதிரியை பார்த்து பழக்கமில்லை எரிச்சுதான் பழக்கம்” என்பது வில்லன் சரத்குமாரின் பாலிசி. “எதிரியை எரிப்பது மட்டுமல்ல சாம்பாலாக்கித்தான் பழக்கம்” என்பது ஹீரோ சரத்குமாரின் பாலிசி. இவர்கள் இருவரின் மோதல்தான் சண்டமாருதம். என்கிறார் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்
இதன் படப்பிடிப்பு (மே 14) காலை மயிலாப்பூரில் உள்ள அப்பர்சாமி கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இதில் திரையுலக முன்னணியினர், சமத்துவ மக்கள கட்சி பிரமுகர்கள், நடிகர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக நடந்த சிறப்பு வழிபாட்டில் சரத்குமாரும், ராதிகாவும் கலந்து கொண்டு வழிபட்டனர்.
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
