Your Ad Here

பழம்பெரும் நடிகர் திடீர் கண்ணையா மரணம்


    பழம்பெரும் நடிகர் ‘திடீர்’ கண்ணையா, நேற்று மாரடை ப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 76.  ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் பஸ் கண்டக்டராக அறிமுகமானவர் கண்ணையா. பிறகு ‘அபூர்வ ராகங்கள்’, ‘ப்ரியா’, ‘வெள்ளை ரோஜா’, ‘புதிய பாதை’, ‘பொங்கி வரும் காவேரி’, ‘நம்ம ஊரு நாயகன்’, ‘போக்கிரி’ உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். நாடக நடிகர்கள் வராத நாட்களில் திடீர் திடீர் என்று இவரை நடிக்க அழைப்பார்களாம்.

அதனால் ‘திடீர்’ கண்ணையா ஆனார். கடந்த சில மாதமாக நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று நண்பகல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் அயனாவரம் சுடுகாட்டில் இன்று தகனம் செய்யப்படுகிறது.மறைந்த கண்ணையாவுக்கு மனைவி ராஜேஸ்வரி, மகன் ரமேஷ், மகள் சித்ரா உள்ளனர்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்