Your Ad Here

பென்சில் படம் பள்ளி மாணவர்களின் காதல் கதையா?


    இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பென்சில். ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மற்றும் ஷாரிக், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், திருமுருகன் நடிக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குனர் மணி நாகராஜ் கூறியதாவது:வாழ்க்கை முழுவதும் கூடவே பென்சில் வந்தாலும் பள்ளி பருவத்துக்கு பிறகு அதற்கு நாம் முக்கியத்துவம் தருவதில்லை. இதை மையப்படுத்திதான் படத்தின் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ஸ்டில்களை பார்த்துவிட்டு சிலர், இது பள்ளி மாணவர்களின் காதல் படம் என்று நினைக்கிறார்கள். அப்படி இல்லை.

அந்த வயதிற்கே உரிய சின்ன ஈர்ப்பைத்தான் காட்டுகிறேன். மற்றபடி இது த்ரில்லர் படம்.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலருக்கு அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று நிகழ்கிறது. அதை அவர்கள் எப்படி சமாளித்து வெளியே வருகிறார்கள் என்பதுதான் திரைக்கதை. பிளஸ்&2 மாணவன் கேரக்டருக்கு பொருத்தமான ஒருவர் வேண்டும் என்பதால் ஜி.வி. பிரகாஷை நடிக்க கேட்டோம். சின்ன தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொண்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்