Your Ad Here

படம் முழுவதும் ஒரே ஒருவர் நடிக்கும் ‘என் உயிர் என் கையில்’


    ரன்வீர் சிங் கக்வால் வழங்கும் வாரியர்ஸ் கிளான் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘என் உயிர் என் கையில்’ . இந்தப்படத்தை தமிழ், ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளில் படமாக எடுத்து வருகிறார்கள். படம் முழுவதும் ஒரே நடிகர் தான். படத்தில் அந்த ஒருவராக நடிக்கிறார் ஜெய் ஆகாஷ்.

இப்படத்தின் தமிழ் பதிப்பு அறிமுக விழா, மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 'வி ஹவுஸ் புரொடக்‌ஷன்'ஸ்’ சுரேஷ் காமாட்சி படத்தின் டிரைலரை வெளியிட, இயக்குனரும், இசையமைப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் பெற்றுக்கொண்டார்.

ஜெய் ஆகாஷை ஒரு மரப்பெட்டியில் வைத்துப் பூட்டி அதை தண்ணீருக்குள் தள்ளிவிடுகிறார்கள் அவரது எதிரிகள். அவரிடம் இருப்பது செல்போனும் ஒரு சிகரெட் லைட்டரும் தான். அதை வைத்து அவர் தப்பிக்க எடுக்கும் முயற்சிகள் தான் முழுப்படத்தின் கதையாம். படத்தில் ஜெய் ஆகாஷ் தமிழகத்தைச் சேர்ந்த டெல்லியில் பணிபுரியும் ஆடிட்டராக வருகிறார்.

அதாவது, ஒரே ஆளை வைத்து இரண்டுமணிநேரம் எப்படி கதை சொல்லமுடியும் என்று ஆச்சர்யப்படுபவர்கள் படம் பார்த்தால் வாயடைத்துப் போய்விடுவார்கள் என்கிறார் படத்தின் இயக்குனர் ராகுல் சிங் காக்வால்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்