Your Ad Here

எந்த கேரக்டராக இருந்தாலும் குற்றம் குறை சொல்லாமல் நடிப்பேன்! டைரக்டர்களிடம் ஆதரவு திரட்டும் மதுமிதா.


        பார்த்திபனின் குடைக்குள் மழை படத்தில் அறிமுகமானவர் மதுமிதா. அதையடுத்து இங்கிலீஷ்காரன், சந்தானம்-கஞ்சாகருப்பு நடித்த அறை எண் 305ல் கடவுள், சுப்பிரமணியசிவா இயக்கத்தில் அமீர் நடித்த யோகி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் எதுவுமே ஓடாததால் கோலிவுட் அவரை கண்டுகொள்ளவில்லை.

இதனால் கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு திருமணம் செய்து கொண்ட மதுமிதா, மீண்டும் நடிப்புக்களத்தில் குதித்திருக்கிறார். அதோடு, திருமணமான நடிகைகளுக்கு அக்காள், அண்ணி வேடங்கள்தானே தருவார்கள் என்பதை புரிந்து கொண்டு, தனது இரண்டாம் கட்ட முயற்சியை எடுத்த மதுமிதா, இப்போது கார்த்தி நடித்துள்ள பிரியாணி படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருக்கிறார்.

அக்காள் என்றால் டயலாக்கே இல்லாத அக்காளாக இல்லையாம். சில சீன்களில் அதிர்வேட்டாக பொங்கி எழுந்து டயலாக் பேசி ஆவேசமாகவும் நடித்திருக்கிறாராம். அதனால், கதாநாயகியாக இயக்குனர்களின் மனதில் பதியாத நான், இந்த படத்தின் மூலம் அழுத்தமாக பதிவேன் என்று நம்புவதாக சொல்லிக்கொண்டிருக்கும் மதுமிதா, கிட்டத்தட்ட தன்னை முற்றிலுமாக மறந்து விட்ட கோடம்பாக்க டைரக்டர்களை சந்தித்து ஆதரவு திரட்டியும் வருகிறார்.

அப்போது, மாஜி ஹீரோயின் என்பதை மறந்து விட்டு, ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸடாக நினைத்து எனக்கு சான்ஸ் கொடுங்கள். நீங்கள் எந்த மாதிரியான வேடம் கொடுத்தாலும் குற்றம் குறை ஏதும் சொல்லாமல் நடித்துக்கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று கேட்டுக்கொண்டு வருகிறாராம். மதுமிதாவின் எளிமையும், மனதை தொடும் பேச்சும் சில டைரக்டர்களை ஈர்த்திருக்கிறதாம். அதனால், அவர்கள் கொடுத்த நம்பிக்கை வாக்குறுதிகளை நம்பி அடிக்கடி கோலிவுட்டுக்கு விஜயம் செய்கிறார் மதுமிதா.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்