
கமலின் இளைய மகள் அக்ஷரா நடிகை ரதியின் மகன் தனுஜ் விர்வானியை காதலிக்கிறாராம்.
கமலுடன் உல்லாச பறவைகள், ரஜினியுடன் முரட்டுக் காளை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரதி. பஞ்சாபி பெண்ணான ரதி தமிழ் தவிர இந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்.
இந்நிலையில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் தனுஜை காதலிப்பதாக பாலிவுட்டில் பேசப்படுகிறது. இருவரும் தற்போது நெருக்கமாக பழகி வருகிறார்களாம். தனுஜ், லவ் யூ சோனியோ என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார்.
மும்பையில் தாய் சரிகாவுடன் தங்கியிருக்கும் அக்ஷரா முன்னதாக பிரபல இந்தி நடிகர் நசீருத்தின் ஷாவின் மகன் விவான் ஷாவை காதலிப்பதாக கூறப்பட்டது. பல இடங்களுக்கு அவர்கள் ஜோடியாக சென்று வந்தனர்.
கமல்ஹாசன்-சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. இளைய மகள் அக்ஷரா. இதில் மூத்த மகள் ஸ்ருதி ஏற்கெனவே நடிக்க வந்துவிட்டார். ஸ்ருதியைத் தொடர்ந்து கமலின் இளைய மகள் அக்ஷராவும் விரைவில் நடிக்க வருகிறார்.
அக்ஷரா தற்போது ஆர். பால்கியின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.