Your Ad Here

கார்த்திக்கின் ‘உள்ளத்தை அள்ளித்தா’ ரீமேக்கில் கௌதம் கார்த்திக்



        உள்ளத்தை அள்ளித்தா ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் கௌதம் கார்த்திக்.

கார்த்திக், ரம்பா ஜோடியாக நடித்த படம் ‘‘உள்ளத்தை அள்ளித்தா’’. இப்படம் 1996–ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. சுந்தர்.சி இயக்கி இருந்தார். கவுண்டமணி, மணிவண்ணன், செந்தில், ஜெய்கணேஷ் ஆகியோரும் நடித்து இருந்தனர். முழு நீள காமெடி படமான இதனை தற்போது ரீமேக் செய்யப்போவதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது.

கார்த்திக் கேரக்டரில் அவரது மகன் கௌதம் கார்த்திக் நடிக்கிறார். சுந்தர்.சியே இப்படத்தையும் இயக்குவார் என தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.

இதற்கு முன்பு தியாகராஜன் நடித்த ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தின் ரீமேக்கில் அவரது மகன் பிரசாந்த் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்