50 கோடி வசூலுடன் 50வது நாளை தொட்டது ராஜா ராணி
ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த 'ராஜா ராணி'யை அட்லீ டைரக்ட் செய்திருந்தார். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவுடன் இணைந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். நாளை (நவம்பர் 15) ராஜா ராணி 50 வது நாளை தொடுகிறது. வெளியிடப்பட்ட தியேட்டர்களில் 30 சதவிகித தியேட்டர்களில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. ராஜா ராணி இதுவரை 50 கோடி வசூலித்துள்ளதாக படத்தின் செய்தி தொடர்பாளர் அனுப்பி உள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அட்லி கூறியதாவது "என் கனவு நிறைவேறியிருக்கிறது. என்னையும் என் படைப்பையும் ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி. 2014ம் ஆண்டும் இதே கம்பெனியுடன் இணைந்த ஒரு படம் இயக்க இருக்கிறேன். அது ராஜா ராணியிலிருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக இருக்கும்" என்றார்.
"நல்ல படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. புதிய, திறமையான இளைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்க ஊக்கம் தருவதாக இந்த வெற்றி அமைந்திருக்கிறது" என்கிறார் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ்.
"முருகதாசுடன் இணைந்து நாங்கள் தயாரித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கிறது. தொடர்ந்து அவருடன் இணைந்து தமிழ், மற்றும் இந்திப் படங்களை தயாரிக்க உள்ளோம்" என்கிறார் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ தலைமை செயல் அதிகாரி விஜய் சிங்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.