Your Ad Here

திடீர் தாக்குதல்: ஸ்ருதிக்கு பாதுகாப்பு


    ஸ்ருதிஹாசன் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியதை அடுத்து அவருக்கு இந்தி பட தயாரிப்பாளர் 2 பாடிகார்டுகளை நியமித்துள்ளார்.இந்தி படங்களில் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், மும்பை பாந்த்ராவில் அபார்ட்மென்ட் ஒன்றில் வசித்து வருகிறார். நேற்று காலை அவர் வீட்டு ஹாலிங் பெல் அடித்ததும் கதவை திறந்து ‘யார்?’ என்றார் ஸ்ருதி. அப்போது அந்த மர்ம நபர், ஸ்ருதியின் முகத்தைப் பிடித்து வெளியே இழுத்தான். இதை எதிர்பார்க்காத ஸ்ருதி அவனை வெளியில் தள்ளி கதவை பூட்ட முயன்றார். இதில் அவன் கை மாட்டிக்கொண்டது.

இதையடுத்து கையை இழுத்துக்கொண்டு அவன் ஒடிவிட்டான்.இதுபற்றி ஸ்ருதிஹாசனின் செய்தி தொடர்பாளர் கூறும்போது,  ‘இதற்கு முன்பே, மும்பை பிலிம் சிட்டியில் உள்ள மெஹபூப் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கில் இருந்த ஸ்ருதியை பார்க்க வந்தான். அப்போது ‘என்னை தெரியலையா?’ என்று கேட்டுக்கொண்டே அவரது கேரவனில் ஏற முயன்றான். பிறகு ஸ்ருதியின் சிகை அலங்கார நிபுணர் அவனை வெளியே தள்ளினார். பிறகு அவர் காரின் அருகில் வந்து ஏற முயன்றான். இப்போது வீடுவரை வருவான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை’ என்றார். இந்தச் சம்பவத்தை அடுத்து ஸ்ருதிஹாசன் நடித்துவரும், ‘வெல்கம் பேக்‘ படத்தின் தயாரிப்பாளர் பிரோஸ் நதிதாவாலா, 2 பாடிகார்டுகளை அவரது பாதுகாப்பு அனுப்பி வைத்துள்ளார். இவர்கள் இரவு பகலாக ஸ்ருதிக்கு பாதுகாப்பு கொடுப்பார்கள்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்