Your Ad Here

ப்ரியாஆனந்த் வாய்ப்பை தட்டிப்பறித்த ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா


  இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தில் ஹீரோவாக நடித்ததை அடுத்து, மேலும் சில இளவட்ட இசையமைப்பாளர்களையும் ஹீரோவாக்கும் முயற்சியில் சில புதுமுக இயக்குனர்கள் கதைகளுடன் வலம் வந்தனர்.

ஆனால், அதற்கடுத்தபடியாக யாருமே பிடிகொடுக்காதபோதும் ஜி.வி.பிரகாஷ்குமார் மட்டும் தனக்குள் இருந்த ஹீரோ ஆசையை வெளிப்படுத்தி கதை கேட்டார்.

பல கதைகள் கேட்டதில் மதயானைக்கூட்டம் என்ற கதை பிடித்து விட அதில் நடிப்பதாக இருந்தார். ஆனால், திடுதிப்பென்று கதிர் என்ற வேறொரு நடிகரை அந்த கதையில் நடிக்க வைத்து விட்டு தான் நழுவிக்கொண்டார்.

இருப்பினும், அதன்பிறகும் தொடர்ச்சியாக கதை கேட்டு வந்த ஜி.வி.பிரகாஷ், இப்போது பென்சில் என்ற படத்தில் நடிப்பதாக அறிவித்திருக்கிறார். சாட்டை பட பாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் அந்த படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக நடிக்கிறார் அவர்.

அப்படத்தில் ப்ரியாஆனந்த் நடிப்பதாக முன்பு கூறப்பட்டது ஆனால், தற்போது அவர் பிசியாக இருக்கிறார் என்பது மட்டுமின்றி, ஜி.வி.பிரகாஷ்குமாருக்கும், அவருக்கும் ஜோடி பொருத்தம் சரியாக வராது என்று சிலர் கருத்து சொல்ல, அவரை படத்திலிருந்து தூக்கி விட்டனர்.

அதனால் அவருக்குப்பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யாவை புக் பண்ணிருக்கிறார்கள்.

ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படமே ஹிட் என்பதோடு, அப்படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் என்ற பாடலும் ஹிட் ஆனதால், அதே பாணியில் இந்த படத்தில் ஒரு பாடலும் வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்