Your Ad Here

கேரளாவிலும் பாண்டியநாடு ரிலீஸ்!!


   விஷால் முதல்முறையாக தனது விஷால் பிலிம் பேக்டரி பேனரில் தயாரித்து நடித்துள்ள படம் ‘‘பாண்டியநாடு’’. சுசீந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷால் ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில், விஷாலின் அப்பாவாக பாரதிராஜா நடித்துள்ளார். இமான் இசையமைத்துள்ளார். தீபாவளி விருந்தாக இப்படம் ரிலீஸாக இருக்கிறது. தற்போது படத்தின் புரொமோசன்களுக்காக விஷால் ஒவ்‌வொரு ஊராக சென்று வருகிறார்.

இந்நிலையில் பாண்டியநாடு படத்தை கேரளாவிலும் ரிலீஸ் செய்ய இருக்கிறார் விஷால். இதற்காக விஷால், லட்சுமி மேனன் ஆகியோர் கேரளா சென்றிருந்தனர். அங்கு கொச்சினில் நடந்த புரொ‌மோசன் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அங்கு விஷால் தனது படத்திற்கு சப்போர்ட் பண்ணும்‌படி கேட்டு கொண்டார். ஏற்கனவே அவரின் திமிரு, சண்டக்கோழி படங்கள் அங்கு நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த படத்திற்கும் விஷால் ஆதரவு கேட்டுள்ளார். தற்போது கேரளாவில் மலபார் ஏரியாவில் சேஞ்ச் சினிமாஸ், திருவாங்கூர் ஏரியாவில் திருவேன்ரம் டாக்கீஸ், கொச்சின் ஏரியாவில் சினி ரிலீஸ் பாலக்காடு ஆகிய நிறுவனங்கள் படத்தை ரிலீஸ் செய்கின்றன. கேரளாவிலும் பாண்டியநாடு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யும் முனைப்போடு விஷால் செயல்பட்டு வருகிறார். தீபாவளி தினத்தன்று கேரளாவில் தியேட்டர்கள் கிடைக்காத பட்சத்தில் மறுவாரம் அதாவது நவ., 8ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்