தங்கமீன்கள் தேர்வு-கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்கு
இந்தியாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவான கோவா திரைப்பட விழாவிற்கு ராமின், ‘தங்கமீன்கள்’ படம் தேர்வாகி இருக்கிறது. இந்தவிழாவுக்கு தேர்வாகி இருக்கும் ஒரே தமிழ்ப்படம் இதுவாகும். ‘கற்றது தமிழ்’ ராம், நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கிய படம் ‘தங்கமீன்கள்’. ராமே இப்படத்தில் ஹீரோவாக நடித்தார். இயக்குநர் கெளதம் மேனன் இப்படத்தை தயாரித்தார். அப்பா-மகளுக்கு இடையேயான பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக இப்படம் உருவாகி இருந்தது. பல்வேறு நிதிநெருக்கடிக்கு பிறகு சமீபத்தில் தான் இப்படம் ரிலீஸானது. வசூல்ரீதியாக இப்படம் பெரும் வெற்றி பெறாவிட்டாலும் அனைவரின் பாராட்டையும் பெற்றது. அதிலும் குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய்... பாடல் சூப்பர் ஹிட்டானது.
இந்நிலையில் கோவாவில் 44வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நவம்பர் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய படங்களில் இருந்து 25 படங்கள் தேர்வாகி இருக்கிறது. அதில் தமிழில் இருந்து ராம் இயக்கிய தங்கமீன்கள் படம் தேர்வாகி இருக்கிறது. சுமார் 10பேர் கொண்ட நடுவர்கள் 21நாட்களாக பல்வேறு படங்களை பார்த்து தங்கமீன்கள் உள்ளிட்ட 25 படங்களை தேர்வு செய்துள்ளனர்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு தமிழில் இருந்து தங்கமீன்கள் படம் தேர்வாகி இருப்பது தங்கமீன்கள் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டைரக்டர் ராம், சமீபகாலத்தில் சர்வதேச அளவில் தயாரான குழந்தைகள் படங்களில் எனது படமும் திரையிட தேர்வாகியிருப்பது மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.
செய்திகள்
வினோதங்கள்
Popular Posts
-
மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் சார்பில் எம்.ஆர்.கணேஷ் தயாரிக்கும் படம், ‘பண்ணையாரும் பத்மினியும்’. விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், துளசி நடி...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தயாரிக்கும் படம் மதயானைக்கூட்டம், கதிர் என்ற நியூபேஸ் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஓவியா ஹீரோயின். பாலு...
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
இக்குறும்படமானது samsung s3 கைப்பேசியில் படமாக்கப்பட்டு samsung galaxy tab ல் இசையமைக்கப்பட்டிருக்கிறது. இதில் குழந்தை நட்சத்திரமாக சங்கர் ந...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
-
மெய்யழகி பட நாயகி ஜெய்குவேதனி டூப்பே போடாமல் 170 அடி ஆழ கிணற்றில் குதித்து படக்குழுவினரை அதிர வைத்துள்ளார். தேனி மாவட்டத்தை பின...
Powered by Blogger.
