Your Ad Here

நீலிமா ஹீரோயின் ஆனார்

]
  சின்னத்திரை நடிகை நீலிமா ராணி. பெரிய திரையில் அக்கா, அண்ணி செகண்ட் ஹீரோயினாக நடித்து வந்தார். நான் மகான் அல்ல படத்தில் நடித்தபோது உடன் நடித்த காஜல் அகர்வால் “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. கொஞ்சம் ட்ரை பண்ணினா ஹீரோயினா நடிக்கலாம்”ன்னு உசுப்பேத்தி விட்டுவிட்டார்.

அதனால் நீலிமா டயட்டு, எக்சர்சைசுன்னு ஒரு வருஷம் அன்ன ஆகாரமில்லாம கிடந்து வெயிட் குறைச்சி ஹீரோயின் லெவலுக்கு மாறிவிட்டார்.

அதற்கு இப்போது கைமேல் படம் கிடைத்திருக்கிறது. யாழ் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடி டேனியல் பாலாஜி, இவர்கள் தவிர வினோத், லீமா ஆகியோரும் நடிக்கிறார்கள். இலங்கையில் நடக்கிற கதை. எல்லோரும் இலங்கைத் தமிழ் பேசி நடிக்கிறார்கள்

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்