Your Ad Here

தொழில்நுட்பம் வந்தாச்சு: 3டி படங்களை கண்ணாடி அணியாமல் பார்க்கலாம்



    25 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இந்தியாவின் முதல் 3டி படமான மைடியர் குட்டிச் சாத்தான் மக்களை ஆட்டிவைத்தது. அதன் தயாரிப்பாளர் அந்த படத்தின் லாபத்தை வைத்து சென்னையில் தீம்பார்க்கே கட்டினார். அதற்கு பிறகு 3டி படங்கள் பெரிதாக வரவும் இல்லை, வெற்றி பெறவும் இல்லை. சமீபகாலமாக ஹாலிவுட்டில் முக்கியமான படங்கள் அனைத்தும் 3டி பார்மெட்டிலும் வர ஆரம்பித்தது. அப்படி வந்தவைகளில் டின் டின் உள்ளிட்ட சில அனிமேஷன் படங்கள், அவதார் உள்ளிட்ட சில கமர்ஷியல் படங்கள் பெரிய ஹிட்டாச்சு.

இப்போது இதன் அடுத்தகட்டமாக கண்ணாடி அணியாமல் பார்க்கும் 3டி படம் வர இருக்கிறது. முதல் படத்தை உருவாக்கி இருக்கிறவர் கொரியன் டைரக்டர் கிம்ஜிவூன். தி எக்ஸ் என்ற படத்தை கண்ணாடி அணியாமல் பார்க்கும் தொழில்நுட்பத்தில் எடுத்துள்ளார். 30 நிமிடம் -ஓடும் இந்தப் படத்தை மூன்று கேமராக்கள் கொண்டு மூன்று கோணங்களில் காட்சிகளை எடுத்து அதனை ஒருங்கிணைத்துள்ளார். இதை கண்ணாடி அணியாமல் 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம்.

இப்போது நம் கண் எதிரே உள்ள திரையில் மட்டுமே படம் பார்க்கிறோம். இந்தப் படத்திற்கு நமக்கு நேர் எதிராக உள்ள திரையை ஒட்டி பக்கவாட்டிலும் திரைகள் இருக்கும். அதிலும் படம் தெரியும். உதாரணத்துக்கு கோவிலில் ஹீரோ சாமி கும்பிடுகிற காட்சி என்று வைத்துக் கொள்ளுங்கள். கோவில் பிரகாரங்கள் பக்கவாட்டு சுவரிலும் மூலஸ்தானம் நேரடி திரையிலும் இருக்கும். இப்போது நீங்கள் கோவிலுக்குள்ளே இருப்பதை போன்று உணர்வீர்கள். இந்த தொழில்நுட்பத்தில்தான் தி எக்ஸ் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சோதனை முயற்சிதான். எந்த அளவுக்கு மக்களிடம் வரவேற்பை பெறுகிறது என்பது படம் வெளிவந்தபிறகுதான் தெரிய வரும்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்