Your Ad Here

16 வயதில் டீச்சரான லட்சுமி மேனன்!

கேரளாவில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ‘கும்கி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி மேனன். அதையடுத்து, ‘சுந்தர பாண்டியன் மற்றும் குட்டிப்புலி’ படங்களில் நடித்தபோது, 10ம் வகுப்பு படித்த அவர், இப்போது பிளஸ் 1 படிக்கிறார்.  விஷாலுடன் நடிக்கும், ‘பாண்டிய நாடு’ படத்தில், அவருக்கு பள்ளி ஆசிரியை வேடமாம். இதுபற்றி லட்சுமி மேனன் கூறுகையில், ‘பள்ளி மாணவியான எனக்கு, டீச்சர் வேடம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் உடல் வளர்ச்சி, மெச்சூரிட்டியை மனதில் வைத்து, என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்துள்ளனர். அதனால், எனக்கு படிப்பு சொல்லித் தரும் சில ஆசிரியைகளை, ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு, இந்த வேடத்தில் நடித்து வருகிறேன். நிஜமாகவே, ஆசிரியை வேடத்தில் நடிப்பது, பெருமையாகவும், மனசுக்கு நிறைவாகவும் உள்ளது’ என்கிறார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்