அன்று அஜீத்திற்கு அவமரியாதை, இன்று விஜய்க்கு அவமரியாதை - ஆளுபவர்களிடமிருந்து விடுதலை ஆகுமா சினிமா?
திமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரின் பேரன்கள் ஆளுக்கொரு சினிமா கம்பெனி ஆரம்பித்து மொத்த தமிழ் சினிமாவையும் தியேட்டர்களையும் தங்கள் கண்ட்ரோலில் வைத்துக்கொண்டு இருந்தார்கள், அது போதாதென்று பாசத்தலைவனுக்கொரு பாராட்டுவிழா என்ற பெயரில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கு ஏதாவது ஒரு காரணம் சொல்லி பாராட்டு விழா எடுக்கிறோம் என்று பாராட்டுவிழா எடுத்து அதில் ரஜினி,கமல் உட்பட அனைத்து முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள வேண்டுமென்று "அன்பு" அழைப்பு வேறு.
இதை ஒரு முறை நடந்த பாராட்டுவிழாவில் கருணாநிதியிடம் "அய்யா மெரட்டுறாங்க அய்யா" என்று நடு மேடையில் அஜீத் போட்டு உடைக்க அதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்ட மூட் அவுட் ஆன கருணாநிதி மேடையிலேயே விளாசிவிட்டு சென்று விட்டார், அதன் பின் அஜீத் கோபாலபுரம் வாசலில் காத்து கிடந்து நேரில் சென்று மன்னிப்பு கேட்டு பின் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் மனைவியுடன் போய் கடைசி சேரில் உட்கார்ந்து கிடந்தது பழைய கதை.
ஆட்சிகள் மாறின, ஆனால் காட்சிகள் மாறவில்லை, விஜயகாந்தை எதிர்க்கிறேன் என அதிமுக கூட்டணியை எதிர்த்து வடிவேலு தேர்தல் நேரத்தில் ஓவராக சலம்ப முடிவுகள் வேறு விதமாக வந்தது, அன்றிலிருந்து இன்றுவரை படம் இல்லாமல் இருக்கிறார், இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் என்று சொன்னாலும் வேறு பல காரணங்களால் விஸ்வரூபம் முடக்கப்பட்டது, விஜய்யின் தலைவாவும் வெளிப்படையாக சொல்லாமல் ஏதேதோ காரணங்கள் சொல்லி தடுக்கப்பட்டு பின் வெளியானது.
விஜய் கைகட்டி மன்னிப்பு கேட்கும் விதமாக வீடியோ வெளியிட்டார், இந்திய சினிமாவின் நூறாவது ஆண்டு விழா கூட்டத்தில் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்களை கொண்டுள்ள விஜய்யின் படக்குறிப்புகள் கிளிப்பிங்குகள் எதுவும் வெளியிடப்படவில்லை, ஆனால் வேறு பல படங்களின் கிளிப்பிங்குகள் வெளியாகின, அதே போன்று விஜய்க்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படவில்லை, விஜய் அமைதியாக கடைசி வரிசையில் சென்று உட்கார்ந்தார், ஆனால் விஜய்யை வளைத்து வளைத்து படம் எடுத்ததில் இன்று காலை வெளியான பல பத்திரிக்கைகளிலும் விஐபி வரிசையில் கடைசி வரிசையில் உட்கார்ந்த விஜய் படம் பெருமளவி வெளியானது.
தமிழ்நாடு சினிமாவிலிருந்தே தனது பல முதல்வர்களை தேர்ந்தெடுத்திருப்பதால் ஆளும் வர்கத்துக்கு சினிமாவை கடுப்படுத்த வேண்டும் என்ற ஆவல் உள்ளது தெரிகிறது, அது எந்த கட்சி ஆண்டாலும் என்ற நிலையில் உள்ளது தமிழ் சினிமாவுக்கு நல்லதல்ல.
# லாஸ்ட் ரோவே ஆனாலும் விஜய் உட்கார்ந்தா அது தான் ஃபர்ஸ்ட் ரோ
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.