இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் நடனம் ஆடப்போகிறாராம் விஜய்.
தலைவா பிரச்னையால் சென்னையில் நடைபெறும் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவுக்கு விஜய் அழைக்கப்பட மாட்டார் என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது.
ஆனால் அனைவரின் எண்ணத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு விழாவில் கலந்து கொள்கிறார் விஜய்.
அத்துடன் பாடல் ஒன்றுக்கும் விழாவில் நடனமாடப் போகிறாராம்.
அதுவும் பிரச்னைக்கு காரணமான தலைவா படத்தில் இடம்பெற்றுள்ள வாங்கண்ணா... வணக்கங்கண்ணா... என்ற பாடலுக்குத்தான் அவர் ஆடப் போகிறாராம்.
மேலும் பைட் மாஸ்டர்கள் சண்டைக் காட்சிக்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் நடித்துக் காட்டப் போகிறார் என்கிறார்கள்.