சொன்னா புரியாது படத்திற்கு பிறகு மிர்ச்சி சிவா நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் யா யா.
நாயகன் சிவா எந்தவொரு வேலை வெட்டியும் இல்லாமல், அரசாங்க வேலை கிடைத்தால்தான் வேலைக்கு போக வேண்டும் என்ற நோக்குடன் ஊர் சுற்றி வருகிறார்.
இவருடைய நண்பனாக கூடவே சுற்றித் திரிகிறார் சந்தானம். ஒருநாள் பேருந்தில் சென்று கொண்டிருக்கும்போது தன்ஷிகாவைப் பார்க்கும் சிவா, அவர் மீது காதல் கொள்கிறார்.
அவரைத் தொடர்ந்து பலமுறை தன் காதலைச் சொல்ல பல்வேறு முயற்சிகள் செய்கிறார். ஆனால் அனைத்தும் தோல்வியிலேயே முடிவடைகின்றன.
இந்நிலையில் தன் மீதான காதலைத் தெரிந்துகொள்வதற்காக மொடலான பவர் ஸ்டாரை கேடயமாக பயன்படுத்துகிறார் சிவா.
அதில் சிவாவுக்கு வெற்றி கிடைக்கிறது. மறுமுனையில் சந்தானமும், சந்தியாவும் காதலர்களாக வலம் வருகிறார்கள்.
இந்நிலையில் ஒருநாள் பெண் கவுன்சிலரான தேவதர்ஷினி மீது சிவா தவறுதலாக மோதி விடுகிறார். இந்த மோதல் தேவதர்ஷினிக்குள் சிவா மீது காதலை வரவழைக்கிறது.
சிவாவை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறார் தேவதர்ஷினி. இதற்காக சிவாவின் நண்பனான சந்தானத்தை அணுகுகிறார்.
சந்தானம், சிவா ஏற்கெனவே தன்ஷிகாவை காதலிப்பதை அவரிடம் கூறுகிறார். எனவே தேவதர்ஷினி இவர்களின் காதலை முறிக்க முடிவெடுக்கிறார்.
இதற்காக சந்தானத்திடம் பணத்தைக் கொடுத்து அவர்களின் காதலை பிரிக்கச் சொல்கிறார்.
இறுதியில், சந்தானம் சிவாவுக்கு துரோகம் செய்தாரா? சிவா, தன்ஷிகா காதல் என்னவாயிற்று என்பதே மீதிக்கதை.
சிவா நடிப்பில் வெளிவந்த தமிழ்படம், தில்லுமுல்லு ஆகிய படங்களில் இவருடைய நடிப்பு எந்த அளவுக்கு ரசிகர்களுக்கு சிரிப்பை வரவழைத்ததோ, அதே அளவுக்கு இந்த படத்திலும் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.
இவருடன் சந்தானமும் சேர்ந்தால் கொமடிக்கு சொல்லவா? வேண்டும். படம் முழுவதும் ஒரே சிரிப்பு மழைதான்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தானத்துக்கு இந்த படத்தில்தான் தனியாக ஒரு ஜோடி கொடுத்திருக்கிறார்கள்.
காதல் சந்தியா இவருடைய காதலியாக வருகிறார். சிறிது இடைவெளிக்கு பிறகு திரையில் பளிச்சிட்டாலும், இந்த படம் அவருக்கு ஒரு ரீ என்ட்ரியாக இருக்கும்.
சிவாவுக்கு ஜோடியாய் தன்ஷிகா, பரதேசி படத்தில் பார்த்த தன்ஷிகாவை இப்படத்தில் மொடர்னாக பார்க்கும்போது வியக்க வைக்கிறார்.
சிவா தன்னைக் காதலிக்கிறார் என்று தெரிந்திருந்தும், அதை கண்டுகொள்ளாமல் அசால்டாக திரியும் இவருடைய நடிப்பு பாராட்ட வைக்கிறது.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் வெளிவந்த பின்னர் உடனடியாக ஆரம்பிக்கப்பட்ட படம் என்பதால், இப்படத்தில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனும் வருகிறார்.
இவர் ஒருசில காட்சிகளே என்றாலும், இவர் செய்யும் கொமடி ரசிக்க வைக்கிறது.
மேலும் சிவாவின் அப்பா-அம்மாவாக வரும் இளவரசு-ரேகா, கவுன்சிலராக வரும் தேவதர்ஷினி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தை நிறைவுபடுத்தியுள்ளார்கள்.
இயக்குனர் ராஜசேகரன் முழுக்க முழுக்க கொமடியை மட்டுமே பிரதானமாக வைத்து எடுத்திருப்பதால் படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருக்கிறார்.
விஜய் எபினேஷர் இசையில் பாடல்கள் மனதில் பதியாவிட்டாலும், திரையில் பார்க்கும்போது காலை ஆட்ட வைத்திருக்கிறது.
பின்னணி இசையிலும் முன்னேற்றம் தேவை. வெற்றி ஒளிப்பதிவில் பாடல்கள் படமாக்கிய விதம் அருமை.
மொத்தத்தில் யா யா கொமடியின் உச்சகட்டம்.
நடிகர் : சிவா, சந்தானம்
நடிகை : தன்ஷிகா, சந்தியா,
இயக்குனர் : ஐ. ராஜசேகரன்
இசை : விஜய் எபினேசர
ஓளிப்பதிவு : வெற்றி
Popular Posts
-
என் இரண்டாம் உலகம் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா கூறினார். செல்வராகவன் இயக்கத்தில், ஆர்யா-அனுஷ்கா நடிப்பி...
-
ஒரு படத்தில் நடித்து அப்படம் வெளியான பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பதை கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் கடந்த ஆண்டு வரை கடைபிடித்த...
-
இன்டர்நெட்டில் நடிகை சமீரா ரெட்டியின் ஆபாசப் படங்கள் பரவி வருகிறதாம். சமீரா ரெட்டி தமிழில் வாரணம் ஆயிரம், நடுநிசி நாய்கள், வேட்டை உள்ளிட்ட ப...
-
பிரபல நீலப்பட நடிகை சன்னி லியோன். ஜிஸ்சம்-2 என்ற இந்திப் படத்தின் மூலம் இந்திய சினிமாவுக்குள் நுழைந்தார். தற்போது ஜாக்பாட் என்ற இந்தி...
-
காமெடியில் கொடிகட்டி பறந்த நடிகர் கவுண்டமணி கடந்த சில வருடங்களாக திரைத்துறையிலிருந்து விலகி இருந்தார். தற்போது அவர் மறுபிரவேசம் எடுத்து ‘...
-
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் நடிக்கும் ஜில்லா படத்தை சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். எஸ்.டி.நேசன் டைரக்ட...
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலின் தொடக்கத்தில் ஒலிக்கும் மழலை குரல் இன்றைய இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ...
-
அனுஷ்கா தமிழில் அருந்ததி படம் மூலம் பிரபலமானார். வேட்டைக்காரன் தெய்வதிருமகள், இரண்டாம் உலகம், சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்...
-
டீல் படத்தில் கார்த்திகா டப்பிங் பேசாததால் அவருக்கு பாடகி சின்மயி குரல் கொடுக்கிறார். கோ படத்தையடுத்து அன்னக்கொடி படத்தில் நடித்தார் ...
-
2014 பொங்கல் தினத்தன்று அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய இரண்டு படங்களும்தான் நேருக்குநேர் மோதிக்கொள்வதாக ஏற்கனவே முடிவாகியிரு...
Powered by Blogger.