Your Ad Here

ஹாலிவுட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறேன் -செழியன் பேட்டி!!


    தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் செழியன். இவரது ஒளிப்பதிவில் வந்த இரண்டு படங்களுக்கு (தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி(ஒளிப்பதிவுக்கு அல்ல) தேசிய விருது கிடைத்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில், லண்டன் சர்வதேச திரைப்பட விழாவுக்கு பரதேசி படம் தேர்வானது. அதில் சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஆடை வடிவமைப்புக்கு விருது கிடைத்துள்ளது. லண்டன் விருது குறித்து செழியன் தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி இதோ...

பி.சி.ஸ்ரீராம் அவர்களிடம் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். ஒவ்வொரு படத்துக்கும் அவர் ஒரு புது முயற்சி செய்வார். அவரைப்போன்று நானும் ஒவ்வொரு படத்திற்கும் புது முயற்சி செய்கிறேன். கல்லூரி தொடங்கி பல படங்களில் பணியாற்றிவிட்டேன். இதில் நான் ஒளிப்பதிவு செய்த தென்மேற்கு பருவக்காற்று மற்றும் பரதேசி படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. இப்போது லண்டன் திரைப்பட விழாவிலும் பரதேசி படத்திற்கு விருது கிடைத்துள்ளது. 25 நாடுகளில் இருந்து 300 படங்கள் லண்டன் சர்வதேச திரைப்பட விழாவுக்கு சென்றது. அதில் சிறந்த 10 படங்களை தேர்வு செய்து, பரதேசி படத்தை மட்டும் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்து பிறகு உடையலங்காரம் மற்றும் ஒளிப்பதிவு என இரண்டு விருதுகளை தேர்வு செய்துள்ளனர். அதற்காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

பரதேசி படம் இயக்குவதற்கு முன்பே பாலா சார் என்னிடம் இப்படத்தின் ஒளிப்பதிவு சர்வதேச அளவிற்கு இருக்க வேண்டும் என்று கூறினார். எனக்கும் சர்வதேச ஒளிப்பதிவு பற்றி ஓரளவு தெரியும் என்பதால் பரதேசி படத்தில் என்னால் முடிந்தளவுக்கு ஒளிப்பதிவு செய்தேன். அதற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளது. எனக்கு இவ்வளவு பெரிய அங்கீகாரம் கிடைத்ததற்கு முக்கிய காரணமே பரதேசி படத்தின் கதைக்களமும், படத்தின் இயக்குநருமான பாலாவும் தான்.

லண்டன் விருது எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அடுத்தும் பாலா படத்தில் பணியாற்ற உள்ளேன். அதை முடித்த பின்னர் ஒரு ஹாலிவுட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறேன். தமிழ் படங்களில் பணியாற்றிவிட்டு எப்படி ஹாலிவுட் படம் என்று நீங்கள் கேட்கலாம், கேமராவுக்கு மொழி தெரியாது, கதையின் ஆழம் மட்டுமே தெரியும் என்று கூறியுள்ளார்.

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்