Your Ad Here

தென்னிந்தியரைத்தான் மணப்பேன் தமிழக அரசியலில் தான் குதிப்பேன் - நமீதா!!

நமீதா அரசியலில் குதிக்க இருக்கிறார். பாரதிய ஜனதா கட்சியில் சேர இருக்கிறார் என்று வந்து கொண்டிருந்த யூக செய்திகளுக்கு பதில் அளித்திருக்கிறார். ஆம், அவர் நிஜமாகவே அரசியலில் குதிக்க முடிவு செய்திருக்கிறார். அதுவும் தமிழ் நாட்டு அரசியலில். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: எனக்கு திடீரென அரசியல் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த வருடமே அரசியலில் குதிப்பது என்று முடிவு செய்து விட்டேன். எந்த கட்சியில் சேருவது என்று தீவிரமாக யோசித்து வருகிறேன். இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை.

பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து விட்டாக வந்த செய்திகள் உண்மை இல்லை. நான் அரசியலில் குதித்தால் அது தமிழ்நாட்டில்தான். நான் இங்கேதான் வாழ்கிறேன். இங்கேதான் வருமான வரி கட்டுகிறேன். நான் சென்னையில் குடியேறி பத்து வருடமாகிவிட்டது. என் வீட்டு விலாசம், பாஸ்போர்ட் விலாசம் எல்லாம் சென்னைதான். எனவே நான் வடஇந்திய பெண் இல்லை. சென்னை பெண்தான். அதனால் அரசியலில் குதித்தால் மாநில கட்சியில் சேர்ந்து இங்குதான் அரசியல் பண்ணுவேன். ஒரு தென்னிந்தியரை திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே வாழ்வதுதான் என் குறிக்கோள்.

இவ்வாறு நமீதா கூறியிருக்கிறார். (நமக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்)

Recent Posts View More >>

செய்திகள்

வினோதங்கள்